அமெரிக்க அதிபர் தேர்தல்.. பேசுபொருளாக மாறிய ஒபாமா மனைவியின் நெக்லஸ்.. 

671

வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபர் வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச்சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார்.

இந்தச் சூழலில், ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல், தற்போதைய அதிபர் டிரம்ப்பை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அப்போது, VOTE  என்ற எழுத்துகளுடன் அவர் அணிந்திருந்த “வோட் ” நெக்லஸ்  தற்போது பிரபலமாகிவிட்டது. அந்த டிசைன் எங்கே கிடைக்கிறது என இணையத்தில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது என்று சொன்னால் மிகையில்லை.

தற்போது ஒபாமா நெக்லஸ் என்ற பெயரில் பிரபலமாகியுள்ள இந்த நகையின் விலை, 21 ஆயிரம் ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முழுமையான தங்க நகை அல்ல, தங்க கலப்புடன் செய்யப்பட்ட நகை என்பது குறிப்பிடத்தக்கது.