OBC இட ஒதுக்கீடு : மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம்

224

OBC இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

OBC மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,OBC இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எனவே OBC 50 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், பிரதமர் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி, நாம் அனைவரும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

Advertisement