வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து மனு தாக்கல்

696

மதுரை வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 257 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைகை ஆற்றில், மதுரையின் ஆரப்பாளையம் பகுதியிலிருந்து, விரகனூர் பகுதி வரை 452 இடங்களில் கழிவுநீர் நேரடியாக வைகை ஆற்றில் கலப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரைகளின் இருபுறங்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் வைகை அணை காணாமல் போகும் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வரும் 3ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of