“ஒரு நாள் லீவும், முதல் ஷோ டிக்கெட்டும்” – பணியாளர்களுக்கு ஆச்சரியம் அளித்த நிறுவனம்

509

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் 2.0 படம், உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இது இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும். சூப்பர்ஸ்டார் ரஜினி படம் என்றாலே தியேட்டர்களில் திருவிழா கோலம் தான். ரசிகர்கள் அந்த அளவுக்கு பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். 2.0வுக்கும் அப்படித்தான் அமைந்துள்ளது.

இந்நிலையில் கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம், தங்களின் பணியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியுட்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படத்தினை பார்பதற்கு பணியாளர்கள் அனைவருக்கும் இன்று (29.11.2018) விடுமுறை அளித்தது மட்டுமல்லாமல், முதல் நாள் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட்டும் வழங்கி ஆச்சரியபடுத்தியுள்ளது.