சிம்டாங்காரன் சில்பினுக்கு போறேன் பக்கில போடேன் – தர லோக்கலில் வெளியான சர்கார் பாடல்

1529

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ’சர்கார்’. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ. கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து “சிம்டாங்கரன்” என்ற ஒரு பாடல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. வரும் தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்ட வகையில் நடக்க இருக்கிறது.

இன்று மாலை 6 மணிக்கு சமூக ஊடகங்களில் வெளியான “சிம்டாங்கரன்” பாடலின் லிரிக்கல் வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், சிம்டாங்காரன் என்றால் என்ன? என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குரிய விளக்கத்தை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார். சிம்டாங்காரன் என்றால், கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன் என்று அர்த்தம். மேலும், கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் தான் நம் சிம்டாங்காரன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.