புதுச்சேரி காலாப்பட்டு பகுதி கடலில் கிடந்த மர்மப்பொருள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்

439

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை அடுத்த சின்னகாலாப்பட்டு கடலில் 5 கி.மீ. தொலைவில் உருளை வடிவிலான மர்மப்பொருள் ஒன்று கிடந்ததுள்ளது.

கடலுக்கு சென்ற காலாப்பட்டு பகுதி மீனவர்கள், மர்ம பொருளை பார்த்ததும் அதனை கயிற்றால் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.

இதனையடுத்து, காலாப்பட்டு காவல்நிலையத்துக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த துறைமுகத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர், அந்த மர்ம பொருளை சோதனை செய்தனர்.

அது கஜா புயலில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் என்றும், அது நீர்வழி பாதைக்காக பயன்படுத்தும் பொருளாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில்,   BANGLADESH ENGLAND WATER TRANSPORT AUTHORITY என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்மபொருள் தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து ஆய்வு செய்யப்படுகிறது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of