முகக்கவசம் அணியாவிட்டால் நூதனை தண்டனை

1411

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் அல்லது தெருவை சுத்தம் செய்வது போன்ற நூதனை தண்டனைகளை அளித்து மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் பொதுமுடக்க தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, மக்கள் இயல்பு வாக்கைக்கு திரும்பியுள்ள போதிலும், பெருந்தொற்று பரவல் அபாயம் காரணமாக, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் மும்பை மாநகராட்சி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்த அபராதத் தொகையை செலுத்த இயலாத அல்லது விரும்பாத நபர்களுக்கு தெருவை சுத்தம் செய்தல் போன்ற பணிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இதுவரை 35 பேர் தெருவை சுத்தம் செய்துள்ளதாக மும்பை மாநகராட்சி உதவி ஆணையர் விஷ்வாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement