உயிரிழந்த தாய்..! மகன் கேட்ட சான்றிதழ்..! அதிகாரிகள் அளித்த சான்றிதழால் காத்திருந்த அதிர்ச்சி..!

7409

நாகை மாவட்டத்தில் உள்ள தேத்தாக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது தாய் கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், வாரிசு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பெற்ற கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர், கையெப்பமிட்டு சான்றிதழை வழங்கினர்.

ஆனால், அதிகாரிகள் வழங்கிய அந்த சான்றிதழில், ராஜாவின் தாய் உயிரிழந்துவிட்டார் என்பதற்கு பதிலாக, ராஜாவே உயிரிழந்து விட்டார் என்று வாரிசு சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா, மீண்டும் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.