ஆவடி அருகே வயதான தம்பதியரை கொலை செய்துவிட்டு 50 சவரன் நகை கொள்ளை

535

ஆவடி அருகே வயதான தம்பதியரை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சேக்காட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான ஜெகதீசனும், .அவரது மனைவி விலாஷினியும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை இவர்களது வீட்டிற்கு கார்பெண்டர் வேலை பார்ப்பதற்காக வந்தவர்கள், இவர்கள் கொலை செய்யப்பட்டு, ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களுடன் விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வயதானவர்களை கொலை செய்துவிட்டு ஐம்பது சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியாக வசித்து வரும் வயதான தம்பதிகளை நோட்டமிட்டு, அவர்களை கொலை செய்து, கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of