மதுரையில் 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

321

மதுரையில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது காரில் மறைத்து கொண்டு வந்த 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் காரில் 99 லட்சம் ரூபாய் பழைய 1000 , 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் வந்த நவீன் சக்தி , ராஜசேகர், தர்மா மற்றும் சரவணன் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 நபர்கள் பரமக்குடியை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மதுரை மேலூரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

வெளிநாட்டில் பணத்தை மாற்றி தரும் சரவணன் இந்த பணத்தை தந்ததாக மற்ற மூன்று பேர் விசாரணையின் போது தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.