எரிந்துப்போன குடிசை வீடு..! ஏக்கத்துடன் தேடும் மூதாட்டி..! கண்கலங்க வைத்த வீடியோ..!

272

மதுரை மாவட்டம் தீர்த்தக்காடு பகுதியில் ஆதரவற்ற பாண்டியம்மாள் என்கிற 75 வயது தக்க மூதாட்டி, தனிமையாக ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வைத்து மூதாட்டி வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கென்று இருந்த குடிசை திடிரென ஏற்பட்ட தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில், அவர் பழைய பாத்திரத்தில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவைகளும் எரிந்தது.

இந்நிலையில், தனக்கு இருந்த ஒரே குடிசை வீடு எரிந்து நாசமானதில், ஏதேனும் மிச்சம் மீதி இருக்கிறதா என ஏக்கத்துடன் தேடும் மூதாட்டியின் காட்சிகள், காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

எஞ்சிய பொருட்களை ஒரு பையில் எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி மனதை வதைத்துள்ளது. ஆதரவு அற்ற மூதாட்டிக்கு நல் உள்ளங்களோ அல்லது மாவட்ட நிர்வாகமோ உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of