40-வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் பாட்டி..! பாட்டிக்கு நேர்ந்த கதி..!

737

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ராமாயி என்ற 70 வயதுடைய மூதாட்டி 40 வருடங்களாக தனது கணவர் மாரிமுத்துவை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ராமாயி கடந்த 5 ஆம் தேதி காலை வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கதவை திறந்து பார்த்தபோது, சமையல் அறையில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் மூதாட்டி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து வழக்கப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ராமாயி-யின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மைக்கேல் என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

இதனிடையே இன்று காலை மைக்கேல் பள்ளி பாளையம் ராயல் தியேட்டர் முன்பு நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் மைக்கேல்லை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தான் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால், தூங்கிக் கொண்டிருந்த ராமாயி கழுத்தில் இருந்த எட்டரை பவுன் தங்க செயினை திருட முயன்றதாகவும், அப்போது அவர் விழித்து அவரை அரிவாளால் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து மைக்கேலை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement