“ஏலே.., நாங்க சிங்கம்லே..,” – கொள்ளையர்களை வெளுத்து வாங்கிய முதியோர்..!

531

நெல்லை அருகே அரிவாளுடன் வீட்டில் கொள்ளையாடிக்க வந்த கொள்ளையர்களை முதியவர்கள் துணிச்சலுடன் விரட்டியடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் வசிப்பவர் விவசாயி சண்முகவேல்.

முதியவரான இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முகமூடி அணிந்து அரிவாளுடன் வந்த கொள்ளையர்கள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றனர்.

ஆனால் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரையும் துணிச்சலுடன் எதிர்க்கொண்டு கொள்ளையர்களை விரட்டி அடித்தனர்.

இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அடையாளம் தெரியாத மர்ம நபர்களை கடையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.