புருஷன் பொண்டாட்டி சண்டை..! தடுக்க வந்த முருகேசன்..! இறுதியில் நேர்ந்த பகீர் சம்பவம்..!

400

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு வயது 66. மகன்கள் மற்றும் மனைவி பிரிந்து சென்ற நிலையில், தனது சகோதரி ஒருவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பக்கத்தை வீட்டை சேர்ந்த தம்பதிகள் குடும்ப பிரச்சனையின் காரணமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது குறுக்கு சென்று முருகேசன் தடுத்துள்ளார். அதனையும் மீறி, தம்பதிகள் தொடர்ந்து சண்டை போட்டுள்ளனர்.

இறுதியாக கணவன் மனைவியை ஓங்கி அடிக்க முயன்றுள்ளார். அப்போது குறுக்க பாய்ந்து தடுத்த முருகேசனின் வயிற்றில் அந்த அடி விழுந்தது.

இதனால் வலியில் துடித்த முருகேசன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.