40 வயதில் 4 குழந்தைகள்..! ஒரே பிரசவத்தில்..! அதுவும் இந்த முறையின் மூலம்..!

801

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா இண்டி ரோட்டில் உள்ள ராஜ்ரத்தன் காலனியில் வசித்து வருபவர் சகன்லால். இவருக்கு, தாலிபாய் என்ற மனைவி உள்ளார். 40-வயதாகும் இவருக்கு 2 மகள்களும், 1 மகனும் இருந்தனர். இதனால் தாலிபாய் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டார்.

இந்நிலையில் 2 மகள்களில் ஒருவர் திருமணமாகி சென்றுவிட்டார். மற்றொரு மாற்றுத்திறானளி ஆவார். மகன் சமீபத்தில் தான் உயிரிழந்தார். தங்களை பார்த்துக்கொள்வதற்கு யாரும் இல்லை என்று கவலைப்பட்ட அத்தம்பதியினர், டெஸ்ட் டுயூப் முறையின் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர்.

இதையடுத்து பெங்களுரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தாலிபாய்க்கு அதுதொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் கர்ப்பம் ஆனார். நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி வந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது, 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்தன. ஒரே பிரசவத்தில் பிறந்த அந்த 4 குழந்தைகளும், தாலிபாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of