“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..! உயிரிழந்த பெண்..!

1636

அன்பும், பாசமும் கொடுப்பதில் தாய் முக்கியத்துவம் அளிப்பார் என்றால், ஒரு குழந்தைக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தந்தை தான் முன்னிலையில் இருப்பார்.

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் உள்ள ஒரு பொதுவான பண்பு. இவ்வாறு இருக்க ஆஸ்திரேலியா நாட்டில் 76 வயதான பாட்டி, பல்வேறு கால்நடை விளங்குகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, அந்த பாட்டி தான் வளர்த்து வந்த கோழிகள் இட்ட முட்டைகளை எடுத்து வந்துள்ளார். அப்போது சேவல் ஒன்று அந்த முட்டைகளை பாட்டி எடுக்காமல் இருக்க காலின் கீழ்ப்பகுதியில் கொத்தியுள்ளது.

சேவலின் இந்த தாக்குதலில் அதிக ரத்தம் வெளியேறி பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், காலில் வெரிக்கோஸ் என்ற நரம்புப்பகுதியில் சேவல் கொத்தியதால் அதிக ரத்தம் வெளியாகி பாட்டி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.