கார் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி… வைரல் வீடியோ!

466

மதுரையைச் சேர்ந்தவர் சுமார் 60 வயதான விஜயராணி என்ற மூதாட்டி. இவர், ராஜபாளையத்திலுள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் தனது ஊருக்கு கிளம்பி செல்வதற்காக பேருந்தில் ஏற ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று மதியம் சாலையை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தளவாய்புரம் நோக்கி சென்ற கார் ஒன்று வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும்நிலையில் மூதாட்டியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of