“Olympus Mons” சூரியகுடும்பத்தின் மிகப்பெரிய மலைச்சிகரம்

246

பால்வெளி அண்டம் (Milky Way), இன்னும் மனிதன் முழுமையாய் ஆய்வுசெய்யாத இன்னும் சொல்லப்போனால் முழுமையாய் ஆய்வு செய்ய முடியுமா என்ற கேள்வியுடன் இருக்கும் ஒரு இடம். இதுவரை நாம் கண்டதிரிந்துள்ள 9 கிரகங்கள் (ஆகஸ்ட் 2006ம் ஆண்டு, புளூட்டோ கிரகம் என்ற தன்மையை இழந்துவிட்டதாக IAU அறிவித்தது) இன்றி பல்லாயிரம் கிரகங்களும் அதை சுற்றி வரும் நிலவை போன்ற துணைக்கோள்களும், கோடிக்கணக்கான நட்சத்திர கூட்டங்களும் நிறைந்துள்ள இடம் தான் இந்த பால்வெளி அண்டம்.

மனிதன் அதிகம் ஆராய்ந்த கிரங்களில் பூமிக்கு அடுத்தபடிய உள்ள கிரகம் தான் செவ்வாய் (Mars), பூமியில் இருந்து சுமார் 237 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிரகம் வருடத்திற்கு 687 நாட்களை கொண்டது. அதுமட்டும் இன்றி அடிக்கடி நம்ம கிரகத்தை பார்வையிடும் வேற்றுகிரகவாசிகள் இந்த செவ்வாய் கிரகத்திலிருந்துதான் வருவதாக கூறப்படுகிறது.

இந்த கிரகத்தில் மேற்கொண்ட ஆய்வில் அண்மையில் கண்டறியப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு தான் ஒலிம்பஸ் மோண்ஸ் (“Olympus Mons”) எனப்படும் நமது சூரிய குடும்பத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய மலைச்சிகரம். மார்ச் 18, 2018 அன்று மார்ஸ் கலர் கேமரா மூலம் இந்த எரிமலை படமெடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த சூரிய மண்டலத்திலும் மிக உயரமான கிரக மலை என்று நாசா இதனை அறிவித்துள்ளது, சுமார் 27 கிலோமீட்டர் உயரமும், 520 கிலோமீட்டர் அகலமும் கொண்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of