நிவர் புயல்.. 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை ரத்து..

3619

நிவர் புயல் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளேயும் அரசு பொது பேருந்து போக்குவரத்து நிறுத்தியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணியுடன் ஆம்னி பேருந்துகள் சேவையும் நிறுத்தப்படுவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மறு உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement