18-ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்

523

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து திண்டுக்கல்லை ஒட்டி நிலவுவதாக தெரிவித்தார்.

இதனால் மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.

கஜா புயல் கரையை கடந்ததால் பிற்பகல் முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என பாலச்சந்திரன் கூறினார்.

வரும் 18-ம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவித்த அவர், இதனால் வரும் 18,20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.