தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி கனமழை எச்சரிக்கை உள்ள நிலையில் மீட்புப் பணிக்கு தயார் – தேசிய பேரிடர் மீட்பு படை

718

இதுகுறித்து அந்த படையின் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வளவு குழுக்கள், வீரர்கள் தேவைப்பட்டாலும் அனுப்பத் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீட்புப்படை வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க உத்தர விட்டுள்ள நிலையில், அதிக வீரர்கள் தேவைப்பட்டாலும், வெளி மாநிலங்களிலிருந்து அனுப்பத் தயார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும், மாநில, மாவட்ட நிர்வாகங்களுடன் அவ்வப்போது நிலவரங்களை கேட்டறிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement