பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர். போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

161

காசிமேடு பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 26ம் தேதி இரவு அங்கு நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அம்மாணவியின் பெற்றோர், அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் வீடு திரும்பிய அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த திலோத் என்ற மீனவர் ஆசைவார்த்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திலோத்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.