முப்படைக்கும் ஒரே தளபதி..? – மத்திய அரசின் அதிரடி ப்ளான்..! -ஆனால் ஒரு ஆபத்து..!

573

முப்படைக்கும் ஒரே தலைமை அதிகாரியை நியமிப்பதன் மூலம் மத்திய அரசு பல்வேறு விஷயங்களை செயல்படுத்த முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

முப்படைக்கும் ஒரே தலைமை அதிகாரியை நியமிப்பதன் மூலம் மத்திய அரசு பல்வேறு விஷயங்களை செயல்படுத்த முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இதற்கு பின் பல எதிர்கால திட்டங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இனி முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முப்படைக்கும் இனி ஒரே தலைவர் இருப்பார். தரைப்படை, விமானப்படை, கடற்படை மூன்றுக்கும் இனி ஒரே தலைமை இருக்கும்.

இதற்கு முன் முப்படைகளுக்கு தனி தனி தலைவர்கள் இருந்தனர். இனி அது போல இருக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தற்போது முப்படைக்கும் தளபதியாக ஏற்கனவே குடியரசுத் தலைவர் இருக்கிறார். ஆனால் பொதுவாக குடியரசுத் தலைவர் தளபதியாக இருந்தாலும் கூட, மிக மிக முக்கியமான நேரங்களில் மட்டுமே அவரிடம் ஆலோசனை கேட்கப்படும். இந்த மூன்று படைகளையும் மத்திய அரசே கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.

முக்கியமாக மூன்று படைகளையும் மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் அல்லது பாதுகாப்பு துறை ஆலோசகர்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார். குடியரசுத் தலைவருக்கு பெயருக்கு மட்டுமே இந்த அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தான் தற்போது மத்திய அரசு மாற்ற நினைத்து இருக்கிறது. அதன்படி ராணுவத்தை சேர்ந்த, அல்லது முன்னாள் ராணுவத்தை சேர்ந்த, பாதுகாப்பு துறையில் அனுபவம் உள்ள ஒரு நபரை மூன்று படைக்கும் சேர்த்து தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.

இதன் மூலம் மூன்று படைகளையும் ஒரே குடைக்குள் கொண்டு வர முடியும். இந்திய ராணுவம் வலுவான ராணுவமாக இருந்தாலும் கூட, இந்திய படைகளுக்கு இடையில் பெரிய அளவில் தற்போது ஒற்றுமை இல்லை. அதாவது விமானப்படை எப்போது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது கடற்படைக்கு தெரியாது. கடற்படை செய்யும் ஆபரேஷன் தரைப்படைக்கு தெரியாது. இவர்களுக்கு இடையில் சரியான தகவல் பரிவர்த்தனை இல்லை.

பாகிஸ்தானில் இந்திய விமானி அபிநந்தன் சிக்கிய போதே இதை இந்திய பாதுகாப்புத் துறை உணர்ந்து கொண்டது. அப்போதில் இருந்தே மூன்று படைக்கும் ஒரே தலைவரை நியமிக்க வேண்டும் என்று பாஜக அரசு நினைத்து வந்தது. அப்போதுதான் இவர்களுக்குள் சரியான தகவல் பரிமாற்றம் இருக்கும். அதனால்தான் தற்போது தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

ஆனால் மூன்று படைகளையும் ஒரே நபர் வழி நடத்துவது என்பது ஆபத்தான விஷயமும் கூட. ஏனென்றால் மூன்று படைகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் ஒரு நபர், பிரதமருக்கு இணையான சக்தியை கொண்டு இருக்கிறார் என்று கூட கூறலாம். அவர் நினைத்தால் எதிர்காலத்தில் என்னவேண்டுமானாலும் செய்யலாம். பல நாடுகளில் ராணுவ ஆட்சிகள் இப்படித்தான் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of