ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம்

657

featured

நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இதன் மூலம் தேர்தல் செலவினங்கள் குறையும் என்றும் மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இந்த நடைமுறையை அமல்படுத்தலாம் என சட்ட ஆணையம் கூறியுள்ளது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து, மற்ற மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தினால், மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு முதல் இந்த முறை சாத்தியமாகும் என்றும் இதற்கு மாநில அரசுகளின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படுவது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த முறையை அரசியல் சாசனப்பிரிவு 172யை திருத்தம் செய்யாமல் சாத்தியப்படாது எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of