ஒரு நாள் போட்டி – 341 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா

608

தற்போது இந்தியாவிற்கும் – ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு நாள் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளின் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியன் தொடக்க ஆட்டக்காரர்கலாகிய ரோகித் சர்மா, தவான் ஆகியோர் ஆரம்பத்திலேயே அடித்து ஆடினார். விறுவிறுப்பான ஆட்டத்தால் சீராக ரன்கள் கூடியது.

இந்நிலையில் இந்திய அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடுகளத்தில் இருந்த தவான் 60 பந்தில் அரைசதம் அடித்து தனது அதிரடி ஆட்டத்தை தொடங்க, அணியின் ஸ்கோர் அதிகரித்தது இந்தியா 24.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

தவான் சதம் அடிப்பார் என்று நினைத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக 96 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி அணியை வழிநடத்தி சென்றார். ஆட்டநேர இறுதியில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு 341 என்ற இலக்கை கொடுத்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of