தீ பிழம்புடன் பொங்கிவரும் ஆற்று மணல் – பொதுமக்கள் அச்சம்!

283

திருவள்ளூர் மாவட்டம் புண்ணியம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மர்மமான முறையில் தீப்பிழம்புகளுடன் மணல் கொந்தளிப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.முன்னதாக அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தீப்பிழம்பு பொங்கிய மணலில் தெரியாமல் கால் வைத்ததில் காயமடைந்தார். இதே போல அதில் சிக்கிய பன்றி ஒன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மர்மமான அந்த பகுதியை சுற்றி, அதிகாரிகள் தற்காலிகமாக முள்வேலி அமைத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிதாரிகள் அங்குள்ள மண்ணை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்