2022ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க திட்டம்

776

டெல்லியில் கல்வித்துறை சார்பில் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்த RISE என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன் மூலம், வரும் 2022ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

பழங்கால இந்தியாவில் அமைந்திருந்த நாலந்தா, தட்சசீலம், விக்கிரமசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள், கற்பதற்கும் புதுமை படைப்பதற்கும் சமமான முக்கியத்துவம் அளித்ததாக குறிப்பிட்ட மோடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள், பாடத்திட்டம், ஆசிரியர் நியமனம், விரிவாக்கம் உள்ளிட்டவற்றை தாங்களே தீர்மானிக்கும் வகையில் மத்திய அரசு தன்னாட்சி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of