ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல் | CM | Palaniswamy

1095

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

வாழ்வாதாரத்திற்காக வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுபவர்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஜனவரி ஒன்றாம் தேதி இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் பிற மாநிலத்தவர்களும், தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். ரேசன் பொருட்கள் வாங்கச் செல்லும் நபரின் பெயர், ரேஷன் அட்டையில் இருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களின் கைரேகை பதிவு செய்த பின்னரே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.