கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்டு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

112

கர்நாடக மாநிலம் சிந்தாமணியிலுள்ள கங்கம்மா கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்ட கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்டதில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கடந்த மாதம் கர்நாடகாவின் சுல்வாடியில் நிகழ்ந்த இதேபோன்ற நிகழ்வில் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் கவிதா என்கிற பெண் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 9 பேரில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.