வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சலால் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

541

வாணியம்பாடி அருகே ஒருவர் பன்றிக்காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜமாலுதீன். மூச்சுத் திணறல் காரணமாக ஜமாலுதீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜமாலுதீனுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னாம்பேட்டை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் அந்த பகுதி முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.