ஒருதலைக்காதல் : பெண்ணுக்கு கத்திக்குத்து.. தடுக்க வந்த தாய்க்கு நேர்ந்த சோகம்..!

313

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காதலிக்க மறுத்த பெண்ணையும், அவரது தாயையும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகேயுள்ள கொக்குடையான்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனிபாண்டி. இவரது மகள் ஆனந்த சுபேதா, கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் மதன்குமார், ஆனந்த சுபேதாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதனைக் கண்டு காப்பாற்ற ஓடி வந்த அவரது தாயாரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். ஆனால், அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்துவைத்துக்கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement