சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை – உத்தவ் தாக்கரே ஆவேசம்

295

மும்பை வோர்லி பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

பழைய கூட்டணி கட்சி என்றுகூட பார்க்காமல் அடித்து வீழ்த்துவோம் என்று யாரோ சிவசேனாவை குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.

அரசியல் பயணத்தில் மோடி அலையைப்போல் எத்தனையோ அலைகளை சிவசேனா சந்தித்து விட்டது.

ராமர் கோவில் விவகாரத்தை தேர்தல் காலத்து ஆயுதமாக பயன்படுத்துபவர்கள் நாங்களல்ல.

அப்படி செய்பவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே நாங்களும் தேர்தலின்போது ராமர் கோவில் பிரச்சனையை எழுப்புகிறோம் எனறார்