சுழற்பந்து வீச்சாளர்க்கு ஒரு ஆண்டு தடை | Sri Lanka | Danajaya

578

தனஞ்ஜெயா ! இலங்கை அணியில் வளர்ந்து வரும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவரது பந்து வீச்சு ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழும்பியது. பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐசிசி-யிடம் இருந்து நற்சான்றிதழ் பெற்று தொடர்ந்து பந்து வீச தொடங்கினார்.

இந்நிலையில் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் தனஞ்ஜெயா விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் என புகார் கூறப்பட்டது.

இதனால் ஐசிசி-யின் அனுமதி பெற்ற சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அவர் விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது தெரியவந்தது. 12 மாதத்திற்குள் இரண்டுமுறை இந்த விவகாரத்தில் சிக்கியதால், ஐசிசி ஓராண்டு தடைவிதித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of