வெங்காயத்தால் கூந்தலுக்கு இவ்வளவு நன்மையா..!

733

பெரிய வெங்காயம் சமையலுக்கு மட்டும் தான் பயன்படும் என்று நம்மில் சிலர் நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் முடி வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாக வெங்காயம் பயன்படுகிறது. வெங்காயம் கூந்தல் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

பெரிய வெங்காயத்தின் நன்மைகள்:
 1. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 2. வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.
 3. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது.
 4. இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடியின் பளபளப்பு அதிகமாகிறது.
 5. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
onion
செய்யும் முறை:
 1. வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
 2. பின் மிக்ஸியில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
 3. பின் வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவி. விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும் ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.
 4. பின் வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு தலையை நன்றாக அலசவும்.
 5. வாரம் 1 முறை அல்லது இரு முறை இதை பயன்படுத்தலாம்.
 6. தொடர்ந்து 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி வந்தால் நல்ல பலன் பெறலாம்.
 7. வெங்காய சாறுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து பின் தலையில் நன்றாக இந்த சாறை தடவி மசாஜ் செய்வும்
 8. பின் 2 மணி நேரத்திற்கு பிறகு கூந்தலை அலசவும்.

வலிமையான, பொடுகு இல்லாத கூந்தலை பெற இதனை தொடர்ந்து செய்து வந்தால் போதும்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of