“என்ன இப்படி அசிங்கப்படுத்திட்டாங்க..” வெங்காயத்தின் விலை உயர்வு..! விவசாயிகள் நூதன போராட்டம்..!

693

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 140 ரூபாய் வரை விற்பனையாகிறது.

இந்தநிலையில், வெங்காயத்தின் விலை உயர்வை கண்டித்து பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெங்காயத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Advertisement