பொறியியல் படிப்பு – ஆன்லைன் வகுப்புக்கான தேதி அறிவிப்பு

330

கொரோனா ஊரடங்கால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 12 ஆம்தேதி தொடங்கும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 26 ஆம்தேதி வரை முதல் பிரிவு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட ஆன்லைன் வகுப்புகள் அக்டோபர்-28 ஆம்தேதி முதல் நவம்பர் மாதம் 9 ஆம்தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாக தரப்பு  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement