ஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்

733

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடியே கிடக்கின்றன. இதனால் பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மற்றும் காணொலி வகுப்புகள் மூலம் கல்வி கற்றுக் கொடுத்து வருகின்றன.

ஆனால் இப்படி ஒரு கல்வியை பெறுவதற்கு செல்போன், டிவி போன்ற தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், ஆன்லைன் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், கர்நாடகாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹூபள்ளி நகருக்கு அருகே வசிக்கும் முத்தப்பா-கஸ்தூரி என்ற தம்பதியின் வீட்டில் டிவி இல்லாததால், அவர்களது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை.

மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தாய் கஸ்தூரி, தனது தாலியை கடையில்  அடகு வைத்து, 14 ஆயிரம் ரூபாய்க்கு டிவி வாங்கியுள்ளார். பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கான டிவி வாங்க, தாலியை அடகு வைத்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

Advertisement