அட மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கப்பா..? வைரலாகும் புதிய சேலஞ்ச்

728

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டும் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். ஆனால் தற்போது காக்ரோச் சேலஞ்ச் என்ற வித்தியாசமான சவால் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்பி புகைப்படம் எடுப்பதுதான், இந்த காக்ரோச் சேலஞ்ச் கரப்பான்பூச்சி என்றாலே பலருக்கும் பயம். அந்தப் பூச்சியை பார்த்தாலே, பலருக்கு அருவருப்பும், பயமும் தொற்றிக்கொள்ளும். அதை பார்த்ததும் பல அடி தூரம் ஓடி ஒளிந்து கொள்பவர்கள் உண்டு.

அந்தப் பயத்தை, முறியடிக்கவே இந்தச் சவால் எனக் கருதி பலரும் இதை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த காக்ரோச் சேலஞ் சை முதன்முதலில் தொடங்கியவர் பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற இளைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of