ஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம்.

531

ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிகளை வகுக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கும் தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆன்லைன் மருந்து விற்பனைக்கான புதிய விதிகளை அறிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதித்த தடையை நீக்கி பிறக்கப்பிட்ட உத்தரவையும் நீதிபதிகள் நீட்டித்து ஆணையிட்டனர்.

Advertisement