ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு, மருந்துகடைகளின் வேலைநிறுத்த போராட்டம்

1202

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில், மருந்துகடைகளின் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த மாதம் 28ஆம் தேதி வரைவு அறிக்கை வெளியிட்டது.

ஆன்லைன் மருந்து விற்பனையால், தூக்க மாத்திரைகள், போதையை ஏற்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவை தவறான நபர்கள் கையில் கிடைக்கும் அபாயம் உள்ளதாக மருந்து வணிகர் சங்கம் குற்றச் சாட்டியுள்ளது.

எனவே மருந்து, மாத்திரைகளை இணையதளம் மூலம் விற்பதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு மருந்து வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி இன்று நாடு முழுவதும் மருந்துகடைகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள் பங்கேற்கின்றன.

தமிழகத்தில் மட்டும் சுமார் 30ஆயிரம் மருந்துக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டதால் தமிழக அரசுக்கு 15 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையடைப்பு நடைபெறும் நேரத்தில் அவசர மருந்து தேவைக்கு 044 – 28191522 என்ற எண்ணில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement