வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வெளியே வரவேண்டும் – அமலுக்கு வரும் நடைமுறை

1582

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்வதற்காக அனுமதி சீட்டு வழங்கிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த நடைமுறை திட்டம் நாளை மறுநாள் அமலுக்கு வருகிறது. அதன்படி வாரத்தில் ஒருநாள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து வீடுகளுக்கும் நாளைக்குள் டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் என திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வசதிக்காக 11 இடங்களில் தற்காலிக மார்க்கெட் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் எந்த வார்டுக்கு, எந்த மார்க்கெட் என பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்கன் அட்டையின் பின்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of