ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கணவர்! உருட்டுக் கட்டையில் அடிவாங்கிய மனைவி!

773

ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், 25 வயதுள்ள பெண்ணுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அந்த பெண் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர், அவரது ஆண் நண்பருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்ததால் உருட்டு கட்டையால் அடித்து விட்டதாக பரபரப்பு புகாரை அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது,

“கடந்த 8ம் தேதி பாண்டியராஜன் வீட்டில்  ஓரின சேர்க்கையில் ஈடுபட்டிருந்தபோது ராணி கணவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.

அதற்கு பாண்டியராஜன், எங்களுடன் நீ வாழ வேண்டும் என்றால் சேர்ந்து கொள். மூன்று பேரும் ஒன்றாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியராஜன் உருட்டு கட்டையை எடுத்து ராணியை கடுமையாக தாக்கி உள்ளார்.”

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of