நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி.எஸ். மகன்? வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

852

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார்.

மே 23ம் தேதி அன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்குகள் எண்ணப்படவில்லை, முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் எம்.பி ஆகிவிட்டார். அதாவது, ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், குச்சனூரில் இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of