வடமாநிலங்களில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

427

இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நேற்று நடத்திய தாக்குதலின் எதிரெலியாக இன்று இந்தியாவுக்கு ஊடுருவி தாக்குதல் நடத்தவந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்ஷேரா எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.இதைதொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லே, ஜாம்மு, ஸ்ரீநகர், பதான்கோட் ஆகிய விமான நிலையங்களில் இன்று காலையில் இருந்து விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களும் இன்று பிற்பகல் முதல் மூடப்பட்டன. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வட மாநிலங்களில் உள்ள 9 விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானச்சேவைகள் மீண்டும் தொடர இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.