மெழுகுவர்த்தி வெளிச்சம் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம்

708

ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் லைட் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவலம் அரங்கேறி உள்ளது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரவுரான் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது வழக்கம் போல் மின்தடை ஏற்பட்டதால் மருத்துவரும், செவிலியர்களும் மெழுகுவர்த்தி மற்றும் செல்போனில் உள்ள டார்ச் லைட் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்தனர்.

இது குறித்து மருத்துவர் கூறும்போது, தினமும் இங்கு 180 முதல் 200 நோயாளிகள் வரை வருகின்றனர். இங்கு கடுமையாக மின்பற்றாக்குறை உள்ளதாக குறிப்பிட்டார். நோயாளிகள் வரும் போது, மின்சாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களுக்கு நான் சிகிச்சை அளிக்கிறேன் என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement