லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

382

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து உள்ளதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of