நீக்கப்பட்ட ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்ப்பு

331

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 19ம் தேதி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா.
இந்நிலையில் தனது செயலுக்கு நேரிலும்,கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்ததனால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார் ஓ.ராஜா. இன்று முதல் அதிமுக உறுப்பினராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.