ஜெ. சிலைக்கு மாலை! ஓபிஎஸ்-ஈபிஎஸ் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

240

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஏராளமான தொண்டர்கள் புடைசூழ, ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 73 கிலோ கேக் வெட்டி, முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒருவருக்கொருவர் பரிமாறி ஊட்டி மகிழ்ந்தனர்.

Advertisement