“வித்தியாசமான காம்பினேசனா இருக்கே..” வேட்டி சட்டை மீது கோட்..! அசத்தும் ஓ.பி.எஸ்..! இப்படி ஒரு காரணமா..?

753

சமீபத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றிருந்தார். அப்போது, அவர் ஜம்முன்னு கோர்ட் சூட் அணிந்துக்கொண்டு, பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினார்.

இந்நிலையில் தற்போது துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களும், 10 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்கா செல்லும்போது, வேட்டி சட்டை அணிந்து சென்ற அவர், அங்கு குளிர் அதிகமாக இருந்ததால், வேட்டி சட்டை அணிந்துக்கொண்டிருந்த போதே, கோர்ட்டை அணிந்துக்கொண்டு வந்தார்.

அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு சென்ற அவரை, இந்திய தூதரக அதிகாரி சுதாகர்தலேலா, தமிழ் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

10 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள அவர், தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு நிதிகள் பெறுவது, உலக வங்கியின் தெற்காசியப் பிரிவு உயர் அலுவலர்களை சந்திப்பது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்ந்த திட்டப் பணிகளை பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of