ஓ.பி.எஸ்-விஜயகாந்த் சந்திப்பு! கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை?

167

வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சிகளை முடிவு செய்துள்ளது.

மேலும், தேமுதிக கட்சியை கூட்டணி கட்சியாக சேர்த்து கொள்வதற்கு, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போராடி வருகின்றன.

இதனிடையே நாளை அவசர பேச்சு வார்த்தைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று விஜயகாந்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளார். மேலும், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.